விவசாயம் பண்புகள்
பழங்காலத் தமிழகத்தில் பரவலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி, சந்தணம் போன்றவை பயிரிடப்பட்டன. நெல் முதன்மைப் பயிராக இருந்தது. பல்வேறு வகையான நெற்பயிர்களாக வெண்நெல், செந்நெல், புதுநெல், ஐவனநெல், தோராய் போன்ற நெல் வகைகள் மருத நிலப்பகுதியில் பயிரிடப்பட்டன. செந்நெல் மற்றும் புதுநெல்லலில் பல வேறுபட்ட வகைகள் இருந்தன. மிகவும் வளமான மருத நிலத்தில், ஒரு வேலி நிலத்தில் 1000 கலம் நெல் விளைந்தது. மருத நிலத்தை ஒட்டி அதைச் சார்ந்த பகுதிகளிலும்